Apr 28, 2011

லுக்மான்(அலை) அவர்கள் தன் மகனுக்கு செய்த உபதேசம்;;

பின்து இக்பால்

அல் குர்ஆனிலே ஸூரா லுக்மானில் லுக்மான் (அலை) தன் மகனிற்கு செய்யும் உபதேசம் ஒவ்வொறு பெற்றோர்களுக்கும் சிறந்ததோர் முன்மாதிரியாகும். இன்று பெற்றோர் தம் பிள்ளைகளை எவ்வாறு அனுகுகின்றார்கள்? தம் சிறார்களை அன்பாக அழைத்து அறிவுரை கூறுபவர்கள் மிகக்குறைவு. பிள்ளைகள் சிறியதோர் பிழை செய்தாலும் உடனே ஏசுபவர்கள்தான் அதிகம். இவ்வாரான பிழையான அனுகுமுறைகள் காரணமாகவே பிள்ளைகள் பெற்றோர்களை விட்டும் தூரமாகின்றனர்.

தற்காலத்தில் எல்லோரும் குழந்தை உளவியல் என்று பாடம் போட்டுப் படிக்க விரும்புகின்றனர். இருப்பினும் லுக்மான் (அலை)அவர்களின் உபதேசம் குழந்தை உளவியலுக்கு அடித்தளமாக இருந்தது என்பதை உணரத்தவரிவிட்டனர். இதோ லுக்மான் (அலை) அவர்களின் உளவியலை மையப்படுத்திய அனுகுமுறையை சற்று சிந்தையில் அலசிப்பாருங்கள்.

1. என் அருமை மைந்தனே! நீ அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே! நிச்சயமாக இணைவைத்தல் மிகப் பெரிய அநியாயமாகும்.


2. என் அருமை மைந்தனே! நிச்சயமாக நன்மையோ,
தீமையோ கடுகின் வித்தளவாக இருப்பினும் அது ஒரு பாறைக்குள் அல்லது வானங்களில் அல்லது புமியில் மறைந்து இருந்த போதிலும் அல்லாஹ் அதனைகொண்டுவந்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் வெகு நுட்பமானவன் நன்கு உணர்பவன்.


3. என் அருமை மைந்தனே! நீ தொழுகையை நிறைவேற்றுவாயாக! நன்மையைக் கொண்டு பிறரை ஏவுவாயாக! நிச்சயமாக அது காரியங்களில் உறுதியானதில் உள்ளது.

4. உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக்கொள்ளாதே! மேலும் புமியில் கர்வமாக நடக்காதே! நிச்சயமாக அல்லாஹ் தற்பெருமைக்காரர், கர்வங்கொண்டோர் ஒவ்வொருவரையும் நேசிக்கமாட்டான்.

5. மேலும் உன் நடையில் மத்திய தரத்தை கடைபிடிப்பாயாக உன் சத்தத்தையும் தாழ்திக் கொள்வாயாக! சத்தங்களிலெல்லாம் மிக வெறுக்கத்தக்கது கழுதைகளின் சத்தமாகும்.

அழகிய முறையில் கனிவான உபதேசங்கள். ஒவ்வொறு வார்தையிலும் 'யா புனய்ய' என் அருமை மைந்தனே என்ற கனிவான வார்த்தை.
இவ்வாரான வார்தைகள்தான் எம் சிறார்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். லுக்மான்(அலை) அவர்களின் உளவியல் ரீதியான அனுகுமுறைகள் தொடர்கபாக பிரத்தியேக ஆய்வுகள் நடாத்தப்பட வேண்டியமை காலத்தின் தேவையாகும். எனவே லுக்மான்(அலை) அவர்களின் உளவியல் ரீதியான அனுகுமுறைகளை எல்லா பெற்றோர்களும் கடைபிடித்தால் எதிர்கால சந்ததியினரின் எதிர்காலம் ஒளிமயமாகும் என்பதில் ஐயமில்லை.

அல்லாஹ் மிக அறிந்தவன்.